Pungudutivu Kannakai Amman

செய்திகள்

புங்குடுதீவு கிழக்கு கண்ணகை அம்மன் ஆலயம் எனப் போற்றப்படும் இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலய சுற்றுவீதியில் அமைந்துள்ள மு.முத்துப்பிள்ளை அன்னதான மண்டபத்தினையும் அம்பாளின் ஆலய வீதிகளையும் மின்னொளியால் ஒளிரவிடும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அம்பாளை தரிசிப்பற்காக ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்களினதும் பார்வையாளர்களினதும் தாகசாந்தியை நிவர்திசெய்வதற்காக ஒரு தண்ணீர்ப்பந்தலொன்றும் அன்னதான மண்டபத்திற்கான களஞ்சிய அறையொன்றும் கட்டும் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வினாயகப்பெருமானுக்கென அழகிய சித்திரத்தேர் கட்டும் பணிகளும், முருகன் வள்ளி தெய்வானைக்குரிய அழகிய சித்திரத்தேர் கட்டும் பணிகளும் தற்போது நடைபெற்றுக்கொண்டுள்ளதை கீழுள்ள படங்களிற் காணமுடியும்.

வினாயகப்பெருமானினதும் முருகப்பெருமானினதும் சித்திரத்தேர்களை நிறுத்துதற்கான தேர்முட்டிகள் மிகச்சிறப்பாக அமைக்கப்படடுள்ளன.

ஆலயத்தில் நடைபெறும் திருப்பணிகள் யாவும் அம்பாள் அடியவர்களின் தனிப்பட்ட நிதியுதவிகளுடனேயே நடைபெறுகின்றன.

News

தலைவர் உபதலைவர்
திரு. செல்லையா யுகேந்திரன்
தொலைபேசி : +94 777 88 78 30
திரு. மார்க்கண்டு லிங்கநாதன்
தொலைபேசி : +94 777 36 45 57

நீங்களும் அம்பாளின் ஆலய திருப்பணிகளுக்கு நிதியுதவியை
கீழ் வரும் கணக்கிலக்கத்தினூடக அனுப்பி அம்பாளின் அனுக்கிரகத்தை பெற்றுய்யுங்கள்.

Make donations to the following bank account.

Sri Raja Rajeswari Ambal Thevasthanam,
A/C 1120029401
Commercial Bank,
Pettah Branch,
Colombo-11,
Sri Lanka.
SWIFT CODE - CCEYLKLX
Contact : kannakaiambal@gmail.com

சித்திரத்தேர் கட்டும் பணிகள்

(Click on photo to view large)