Pungudutivu Kannakai Amman

ஸ்ரீ இராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தானம்.

புங்குடுதீவு கண்ணகை அம்மன் வருடாந்த மகோற்சவம் 2018.

அம்பிகை அடியார்களே !

கண்ணகை அம்மன் என அழைக்கப்படும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலய வருடாந்த மஹேற்சவம் 15/04/2018 ஞாயிற்றுக்கிழமையன்று கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமாகித் தொடர்ந்து 15 தினங்கள் காலை மாலை உற்சவங்கள் எனச் சிறப்பாக நடைபெறும். உற்சவ காலங்களில் அம்பிகை அடியார்கள் அனைவரும் ஆசார சீலராய் வருகை தந்து அம்பாளின் திருவருளைப் பெற்றுச் சகல செல்வயோகம்மிக்க பெருவாழ்வு வாழும் வண்ணம் அன்புடன் வேண்டுகின்றோம்.

திகதிநிகழ்வுகள்
15/04/2018 ஞாயிற்றுக்கிழமைகொடியேற்றம்
28/04/2018 சனிக்கிழமைதேர்த்திருவிழா
29/04/2018 ஞாயிற்றுக்கிழமைதீர்த்தம்

புங்குடுதீவு கண்ணகை அம்மன் வருடாந்த மகோற்சவம் 2018.

சிவபூமியாம் இலங்கையிலே சைவம் தழைத்து விளங்கும் யாழ் மண்ணின் தென்னகத்தே சிவசீலர்களும், கொடையில் சிறந்த வணிகப் பேராளர்களும், கல்வியும், கலைகளும் கைவரப் பெற்ற பேரறிஞர்களும் நிறைந்த புங்கை நகரினிலே கண்ணகைபுரம் கண்ணகை அம்மன் எனப் போற்றப்படும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலய வருடாந்த மஹேற்சவம் அம்பாளின் திருவருளால் நிகழும் மங்களகரமான விளம்பி வருஷம் சித்திரை மாதம் 2ம் நாள் 15/04/2018 ஞாயிற்றுக்கிழமையன்று கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமாகித் தொடர்ந்து 18 தினங்கள் காலை, மாலை உற்சவங்கள் எனச் சிறப்பாக இவ்வருடமும் நடைபெறத் திருவருள் கூடியிருப்பதால் இவ் உற்சவ காலங்களில் அம்பிகை அடியார்கள் அனைவரும் ஆசார சீலராய் வருகை தந்து அம்பாளின் திருவருளைப் பெற்றுச் சகல செல்வயோகம்மிக்க பெருவாழ்வு வாழும் வண்ணம் அன்புடன் வேண்டுகின்றோம்.

கிரியகால நிகழ்வுகள்

14-04-2018சித்திரை 1ம் நாள்
சனிக்கிழமை
காலை விநாயக வழிபாடு, கண்ணகை அம்மன் திருவிழா, மாலை 3.00 மணிமுதல் பத்திரகாளி அம்மன் திருவிழா, அனுஞ்ஞை, கிராம சாந்தி, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரணைம் முதலான பூர்வாங்க கிரியைகள் நடைபெறும்.
15-04-2018சித்திரை 2ம் நாள்
ஞாயிற்றுக்கிழமை
காலை 6.00 மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகிப் பகல் 11.00 மணிக்குத் துவஜாரோகணம் (கொடியேற்றம்)
28-04-2018சித்திரை 15ம் நாள்
சனிக்கிழமை
காலை 10.00 மணிக்கு விநாயகப் பெருமான், முருகப் பெருமான், ஸ்ரீஇராஜராஜேஸ்வரி அம்பாள் ஆகிய மூர்த்திகள் அழகிய மூன்று சித்திரத் தேர்களில் (இரதோற்சவம்) ஆரோகணித்து வலம் வரும் கண் கொள்ளாக்காட்சி இடம்பெறும்.
29-04-2018சித்திரை 16ம் நாள்
ஞாயிற்றுக்கிழமை
காலை 10.00 மணியளவில் சமுத்திர தீர்த்தம் நடைபெறும். மாலை திருவூஞ்சல், துவஜாரோகணம் (கொடியிறக்கம்) மற்றும் சண்டேஸ்வர உற்சவம் நடைபெறும்.

Pungudutivu Kanakai Amman Annual Festival 2018.

DateFestival
14/04/2018Santhi
15/04/201801st Day Festival, Kodiyettram
16/04/201802nd Day Festival
17/04/201803rd Day Festival
18/04/201804th Day Festival, Magalir Thiruvila
19/04/201805th Day Festival, Panchamoorthigal
20/04/201806th Day Festival, Kappal Thiruvila
21/04/201807th Day Festival
22/04/201808th Day Festival, 1008 Sangaapiseham
23/04/201809th Day Festival, Sumangali Thiruvila
24/04/201810th Day Festival, Kailasavaahanam
25/04/201811th Day Festival
26/04/201812th Day Festival, Mancham
27/04/201813th Day Festival, Sapparam, Vettai
28/04/201814th Day Festival, Rathortchavam (Ther)
29/04/201815th Day Festival, Theerthotchavam
30/04/2018Poongaavanam, Theppathiruvila
01/05/2018Vairavar Poosai, Vairavar Madai

திருவிழாக்கள் காலை 7.00 மணி முதல் 12.00 நண்பகல் மணி வரையும் மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரையும் நடைபெறும். தினமும் அம்பாள் வீதியுலா வரும் காட்சி இடம் பெறும். திரு விழாக் காலங்களில் தங்களால் இயன்ற பால், தயிர், தேன், நெய், இளநீர் மற்றும் பூ போன்ற அபிஷேகத் திரவியங்களை ஆலயத்தில் வழங்கி அம்பிகை அடியார்கள் யாவரும் ஆசார சீலராய் வருகை தந்து அம்பாளைத் தரிசித்துப் பேரருள் பெறுமாறு வேண்டுகின்றோம்.

மஹோற்சவ சிவாச்சாரியார் :- "சிவாகம கிரியா திலகம்" பிரம்மஸ்ரீ ச. ஸ்ரீமதுசூமனக் குருக்கள் (சித்தன்கேணி)

திருவிழாக் காலங்களில் தினமும் மகேஸ்வர பூஜை (அன்னதானம் ) நடைபெறும்.

கண்ணகைபுரம்
புங்குடுதீவு – 10
தொ.பேசி: 021 320 7690, 0777 887 830

இவ்வண்ணம்: ஆலய பரிபாலன தர்மகர்த்தா சபை
ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தானம்

"மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்"